The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color

2.4.09

எனக்கு பிடித்த வெட்டிப்பயல், டொன்லீ, சர்வேசன்

கிட்டத்தட்ட எதிர்பாராத (சுத்தமானே சொல்லலாமே) ஒரு சந்தோஷம்னா நம்ம கலாட்டா நாயகன், கிராபிக்ஸ் வித்தகன், துபாயின் வைகைப்புயல் (துபாயில வைகையா?) ... அய்யய்யோ எப்படி முடிக்கிறதுனு தெரியலையே... சரி நான் ஆதவன் அண்ணாச்சி நமக்கு(ம்) பட்டாம்பூச்சி விருது குடுத்தது தான். போனா போவுதுனு வண்டியில ஏறிக்கோங்கனுட்டாரு. சரிதான்னு விருது குடுத்த அண்ணாச்சிக்கு ஒரு ”ஓ” போட்டுட்டு, இந்த சந்தோஷத்த இன்னும் சில பேருக்கு குடுக்கணுமாமே, குடுத்துருவோம்.




இதற்கு முன்பு நாம ஒரு விருது குடுத்துருக்கிறோம்ல அதுக்கு ஒரு பதிவு போடல அதுனால அதப்பத்தி சில வார்த்தை. அது தான், ஆ! இதழ்களின் “Addicting Blog Award". ஒரு நாள் முதன்முதலாக எதைச்சையாக கார்த்திக்கின் ப்ளாக் பக்கம் சென்றிருந்தேன். சிறிது வாசிக்கவும், மெது மெதுவாக அவருடைய முழு ஆர்கைவ்சையும் படித்து முடித்துவிட்டேன். இவருடைய ப்ளாகை பிடிக்காத நாட்களும் இருக்கிறது, எப்பன்றீங்களா? அவர் போஸ்ட் பண்ணாத நாட்கள் தான் அவை. So ரொம்ப பொருத்தமான விருதுதான் அவருக்கு கொடுத்திருக்கோம்.






அதே போல பொருத்தமா கொடுக்கணுமில்லையா? இந்த பட்டுப்பூச்சி விருதின் கீழே ஒரு வாக்கியம் இருக்கு இல்லையா? “For the coolest blog I ever know". அதுக்கேத்த மாதிரின்னா, சில ப்ளாக் இருக்கு. இதோ அந்த ப்ளாகுகள், அவுங்க மூணு பேருக்கும் இந்த விருதுகள். வாங்கிக்குவாங்கனு நம்புறேன்.



ரொம்ப வாய்விட்டுச் சிரிப்பது, திரு. பாலாஜியின் வெட்டிப்பயலின் ப்ளாகில். 'MOST CREATIVE BLOG’னா அது எனக்கு தெரிந்து இவரோடது தான். ரொம்ப வருடமா எழுதிகிட்டிருக்காரு. மிக மிக பிடித்த ப்ளாகுகளின் இவரோடதும் ஒன்று. ஈமெயில் மூலமா எத்தனை பேர சிரிக்க வைக்கிறாருனு தெரியல, அவ்வளவு cut and paste இவரது ப்ளாகிலிருந்து பறக்கிறது. ஏற்கனவே இவருக்கு ரெண்டு பேர் விருது குடுத்திருக்காங்கனு நினைக்கிறேன். இது இவருக்கு ஹேட்ரிக்.

டொன் லீயின் பதுங்கு குழி”. அடிக்கடி இவருடைய ப்ளாகிற்கு செல்வேன், அருமையான இலங்கை மொழி, இயல்பான நடை, ஏகப்பட்ட நண்பர்கள் இவரது சிறப்புத்தன்மை. இப்பொழுது சமீபமாக அரசியல் இரட்டை அர்த்தங்கள்.

சர்வேசனின் ப்ளாகும் நான் அடிக்கடி பயணிக்கும் இடம். இவரது ப்ளாகில், போட்டொ கிராபி, இசை, பொழுது போக்குனு எல்லாம் பூந்து விளையாடும். எனக்கும் இவைகளில் விருப்பமாதலால் இவரது ப்ளாகும் பிடிக்கும்.



உங்களுக்கும் இவுங்க ப்ளாக் பிடிக்கும்னு நினைக்கிறேன். விருது கொடுத்த ஆதவனுக்கு நன்றி, வாங்கிக்கிட்டவங்களுக்கு மேலும் எழுதி எங்களை மகிழ்ச்சியில் மூழ்கடிக்க வாழ்த்துக்கள். இன்னும் நான் விரும்பிப் படிக்கும் (ஆதவன் உட்பட) பலரிடம் ஏற்கனவே இந்த பட்டாம்பூச்சி பறப்பதால் மீண்டும் கொடுக்கவில்லை.  இப்போதைக்கு பை பை சீ யூ.




27 பேர் கருத்து சொல்லிருக்காங்க:

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் நுண்ணரசியலை

வன்மையாக கண்டிக்கிறோம்

வெட்டிப்பயல் டொன்லீ என்று நீங்கள் சொன்னதாக புகார் வந்துள்ளது

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள்

தங்களுக்கும்

தங்களிடமிருந்து பெற்ற மற்றவர்களுக்கும்.

உலவு.காம் (ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Karthik சொன்னது…

என்னையும் முதல் முதலில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று' சொல்ல வைத்தவர் நீங்க. ஓகே நான் அப்படி எல்லாம் சொல்லலை. ஆனால் முதலில் உங்க அவார்டுதான் வாங்கினேன். உங்க வார்த்தைகள் ஒரு பெரிய Responsibilityஐ கொடுக்குது. மெயின்டெய்ன் பண்ண ட்ரை பண்றேன் தல. :)

அப்புறம், விருதுக்கு வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..!

விருது வாங்கியவர்களுக்கும். :)

வெட்டிப்பயல் சொன்னது…

மிக்க நன்றி ஆ! இதழ்கள்

மூணு பேர் கொடுத்தா எழுதறேனு சொல்லியிருந்தேன். நிச்சயம் எழுதுகிறேன்.

கிரி சொன்னது…

மூவருமே சுவாராசியமாக எழுதுபவர்கள்..

இதில் வெட்டிப்பயல் தளத்தை பார்த்து தான் எனக்கு நாமளும் பதிவு எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.

Suresh சொன்னது…

வாழ்த்துகள் :-) விருது கொடுத்தவருக்கும் .. விருது பெற்றவருகளுக்கும்

’டொன்’ லீ சொன்னது…

நன்றி நன்றி நன்றி....

ஏற்கனவே ஜமால், அருணா இருவரும் சில மாதங்கள் முன்பே தந்து விட்டனர்...

வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கோ...இணைந்து கலக்குவோம்...:-))

SurveySan சொன்னது…

Thanks very much for the honor :)

much obliged!

ஆ! இதழ்கள் சொன்னது…

Thanks for everybody who commented, will return with tamil font.

:)

வால்பையன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

ஆ! இதழ்கள் சொன்னது…

@நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் நுண்ணரசியலை

வன்மையாக கண்டிக்கிறோம்

வெட்டிப்பயல் டொன்லீ என்று நீங்கள் சொன்னதாக புகார் வந்துள்ளது//

ஆகா.. இப்படித்தான் நுண்ணரசியல் எழுதணுமா? இப்பதான் தெரியுது.

சரி டொன் இவருக்கு உங்க பதில் என்ன?

நன்றி ஜமால்.

ஆ! இதழ்கள் சொன்னது…

@Karthik,

உங்க வார்த்தைகள் ஒரு பெரிய Responsibilityஐ கொடுக்குது//

நினைச்சேன்.. sorry for that... நீங்க உங்க பாட்டுக்கு எழுதிகிட்டே போங்க... think normal and be normal.

ஆ! இதழ்கள் சொன்னது…

@வெட்டிப்பயல் சொன்னது…

மிக்க நன்றி ஆ! இதழ்கள்

மூணு பேர் கொடுத்தா எழுதறேனு சொல்லியிருந்தேன். நிச்சயம் எழுதுகிறேன்.//

உங்க போஸ்ட் பார்த்தேன். தொடர்ந்து எழுதி keep rocking.

நன்றி வெட்டிப்பயல்

ஆ! இதழ்கள் சொன்னது…

@கிரி சொன்னது…

மூவருமே சுவாராசியமாக எழுதுபவர்கள்..

இதில் வெட்டிப்பயல் தளத்தை பார்த்து தான் எனக்கு நாமளும் பதிவு எழுத வேண்டும் என்று ஆசை வந்தது.//

ஆமாம் கிரி, ஆனால் வெட்டிப்பயல் ப்ளாக் எனக்கு தெரிந்தது சிறிது தாமதமாகத் தான். அவர் ப்ளாகை முதலிலேயே பார்த்திருந்தால் நான் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பேன். :)))))

ஆ! இதழ்கள் சொன்னது…

@Suresh சொன்னது…

வாழ்த்துகள் :-) விருது கொடுத்தவருக்கும் .. விருது பெற்றவருகளுக்கும் //

நன்றி சுரேஷ். உங்கள் ப்ளாகில் ஏற்கனவே பட்டாம் பூச்சி பறக்கிறது. நீங்களும் கலக்குறீங்க.

ஆ! இதழ்கள் சொன்னது…

’டொன்’ லீ சொன்னது…

ஏற்கனவே ஜமால், அருணா இருவரும் சில மாதங்கள் முன்பே தந்து விட்டனர்...//

அப்படியா? இன்னும் பலர் தர நீங்கள் தகுதியானவர் தானே?

வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கோ...இணைந்து கலக்குவோம்...:-))/

கண்டிப்பா..

நன்றி டான்

ஆ! இதழ்கள் சொன்னது…

@SurveySan சொன்னது…

Thanks very much for the honor :)

much obliged!//

Its a pleasure; its a pleasure to read your blog;

ஆ! இதழ்கள் சொன்னது…

@வால்பையன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!//

மிக்க நன்றி வால். உங்கள் வாழ்த்துக்கள் என்றேன்றும் தேவை.

:))

கலாட்டா அம்மணி சொன்னது…

உங்களை கவிதை எழுதுகின்ற தொடர் பதிவிற்கு மலர்கள் தூவி அழைக்கிறேன்..

ஆ! இதழ்கள் சொன்னது…

@கலாட்டா அம்மணி

ஏன் இந்த கொல வெறி உங்களுக்கு..

:))))

மக்களே இந்த கொடுமைக்கெல்லாம் நான் உங்களை ஆளாக்க மாட்டேன் இதற்கு முழுக்காரணம் க.அ தான். சரி ஒரு கை பார்ப்போம்.

நான் ஆதவன் சொன்னது…

//துபாயின் வைகைப்புயல்//

ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்திவிட்டுட்டு கடைசில காமெடியனாக்கிட்டீங்களே..அவ்வ்வ்

விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.

ஆசிப் அண்ணாச்சி கையில நான் கிடைச்சேன் அவ்வளவு தான். கரப்பான் பூச்சி அவார்டு கொடுத்துடுவாரு

ஆ! இதழ்கள் சொன்னது…

நான் ஆதவன் சொன்னது…

//துபாயின் வைகைப்புயல்//

ஹீரோ ரேஞ்சுக்கு ஏத்திவிட்டுட்டு கடைசில காமெடியனாக்கிட்டீங்களே..அவ்வ்வ்//

மதுரையில் பிறந்தீர்கள் என்று கேள்விப்பட்டு தான் அந்த அடை மொழி கொடுத்தேன். நீங்க தப்பா நினைச்சிட்டீங்களா? ஹையோ ஹைய

ஆசிப் அண்ணாச்சி கையில நான் கிடைச்சேன் அவ்வளவு தான். கரப்பான் பூச்சி அவார்டு கொடுத்துடுவாரு//

அதையும் என் பேரில tag பண்ணீராதிங்க அ அ அ அ

:)

’டொன்’ லீ சொன்னது…

//@நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் நுண்ணரசியலை

வன்மையாக கண்டிக்கிறோம்

வெட்டிப்பயல் டொன்லீ என்று நீங்கள் சொன்னதாக புகார் வந்துள்ளது//

ஆகா.. இப்படித்தான் நுண்ணரசியல் எழுதணுமா? இப்பதான் தெரியுது.

சரி டொன் இவருக்கு உங்க பதில் என்ன?
//

அடடா என்னை வைச்சு இஞ்ச ஒரு நுண்ணரசியல் நடந்திருக்கா...:-))))

இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை....:-)))))

ஆ! இதழ்கள் சொன்னது…

இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை....:-)))))//

ஆகா பழுத்த அரசியல்வாதியாகும் முழு திறமையும் இருக்குதைய்யா உங்களுக்கு.

:)

நன்றி டான்.

டக்ளஸ்....... சொன்னது…

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

ஆ! இதழ்கள் சொன்னது…

@டக்ளஸ்.......

வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

உங்கள் ப்ளாக் பார்த்தேன். அயன் போஸ்ட் ஹாட்.

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

தமிழகச் செய்திகள்

நாணய மதிப்பு

இந்தியச் செய்திகள்

Blog Archive

பிற செய்திகள்

வாசிப்போர்

ஆ! இதழ்கள் © 2008. Template by Dicas Blogger.

TOPO