என்னத்துக்கைய்யா ஓட்டு போடணும்?
வாக்களிக்காதீங்க...
என்ன மாறப்போகுது, ஒண்ணும் கிடையாது. எல்லாம் மறுபடியும் அதே மாதிரிதான் திரும்பப் போகுது. அப்புறம் என்னத்துக்கு வெயில்ல வரிசையில நின்னு ஓட்டு போடணும்? ஒரு நாள் லீவு கிடைக்குது சந்தோஷமா வெளிய போவோம் இல்ல சிறப்பு நிகழ்ச்சி பார்ப்போம். படிக்காதவங்க பாமர ஜனங்களுக்கு ஒண்ணுந்தெரியாது அவுங்க போயி ஓட்ட போடட்டும். நம்ம எத்தனை வருஷமா பார்க்கிறோம் தெரியாதா? தயவு செய்து இப்படி நினைக்க வேண்டாம்.
இங்க ஒரு நாடே கதறிகிட்டு இருக்கு, எதுவும் தெரியாத மாதிரி எப்படி முதுகுல குத்துறாங்க? நம்மையெல்லாம் புழுவாக்கூட மதிக்கவில்லையே... எத்தனை அப்பாவி உயிர்கள் எத்தனை குழந்தைகளின் ரத்தம்? நம்மாள ஒன்ணும் செய்ய முடியலையே?
என்ன செய்ய முடியும் நம்மால்?
வீடியோவைக் கண்டது கார்க்கி ப்ளாகில்
முடியும்... நம்மால் முடியும்.... தேர்தலில் நடத்திக்காட்டுவோம். நமக்கும் உணர்விருக்கிறது எனபதை தெரியப்படுத்தவாவது கண்டிப்பா வாக்களிப்போம்.
:-(((
ஒட்டு போடாமல் வீட்டில் இருப்பதால் ஒரு பயனும் இல்லை.
முயற்சி தான் திருவினை ஆக்கும். எதுவுமே செய்யாமல் எதுவுமே நடக்காது.
தயவு செய்து இது போன்ற பிரச்சாரம் செய்யாதீர்.........
மேலை நாடுகளில் ஓட்டளிப்பது கட்டாயம் என்பது சட்டம் . ஓட்டளிக்கவிட்டால் அவர்கள் தண்டிக்கபடுவார்கள் .
நல்ல கருத்து பாஸ்கரன் நான் சொல்ல வந்ததும் அதைத் தான் ஆனால் வேறு மாதிரியாக. நன்றி தங்கள் கருத்துக்கு. தொடர்ந்து பிராச்சாரம் செய்யுங்கள். கண்டிப்பாய் வாக்களிப்போம்.
ரொம்ப மூவிங்கா இருக்கு. இந்த மாதிரி கையாலாகாத அரசை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது.
:(
அப்படி நினைச்சு போடாம போயிராதிங்க!
@karthik,
கண்டிப்பா ஓட்டு போடணும், நம் குரல் கேட்காதவர்களின் புத்தியில் உரைக்கும் மாதிரி.
@ஆதவன்
ம்ம்... இந்த கவலை இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம்.
@வால்பையன்,
நான் சொல்ல வந்ததை சரியாக கூறினேனா என்று தெரியவில்லை. நீங்கள் இரண்டாவது நபர். நான் கண்டிப்பா வாக்களிக்கவே சொல்லியிருக்கேன்.
முதல் பத்தியை படித்துவிட்டு நான் அதிர்ந்து போனேன். படித்தவராய் இருந்தும் இப்படி சொல்கிறாறே என்று கோபம்கூட வந்தது. பின்னால் வருகின்ற வரிகளை படித்தபின்தான் என் மனம் சமாதானம் அடைந்தது.
என்ன மாறப்போகுது என்று எண்ணாமல் மாற்றிக்காட்டுவோம் என்ற உறுதியோடு வாக்களிக்கக் கோரும் உங்கள் பதிவை நானும் ஆதரிக்கிறேன்.
நன்றி க.அ,
ஒரு attractionற்கு இப்படி எழுதவில்லை. அன்று இந்த வீடியோவை கார்க்கியின் ப்ளாகில் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.
வேலைபளு காரணமா ஒரு நீண்ட responsible post எழுத நினைத்தது முடியவில்லை. அதனால் நீளத்தைக் குறைக்கும் போது உங்களுக்கும் பிறருக்கும் அப்படி தோணியிருக்கலாம். Anyways, now the election is over and let us wait for the results and a small period of future.
Thanks for your frank comment... I appreciate.
:)
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.