நான் உபுண்டுவிற்கு மாறப்போறேன்
நம்மில் பலரும் XP அல்லது விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உபயோகப்படுத்தி வருகிறோம். அதிலும் சிலர் ஒரிஜினல் மென்பொருள் உபயோகப்படுத்துவதில்லை. இப்படி அனுமதியின்றி உபயோகப்படுத்தும் சிலருக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம். உபுண்டு - ubuntu.
இது லினக்ஸ் பேஸ்டு ஓ.எஸ். லினக்ஸ் என்றவுடன் நம்க்கெல்லாம் அதன் பயன்பாடு, பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்காது என்று நினைப்போம். ஆனால் அந்த நினைப்பை மொத்தமாக மாற்ற வந்துள்ள வரப்பிரசாதம் தான் ubuntu. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஓ. எஸ் முற்றிலும் இலவசம் (open source). முதலில விஸ்டாவிற்கு சவால் விடும் அதன் டெஸ்க்டாப்பை கீழே பாருங்கள்
கலக்கலாக இருக்கிறதல்லவா? இதன் வேகம் சும்மா அதிருது. விஸ்டாவில் 4GB ஐ போட்டும் நான் ஸ்டார்ட்டப்பிற்கும் ஷட்டவுனிற்கும் காத்துக்கொண்டிருக்க, என் நண்பன் தனது ஒரிஜினல் விஸ்டாவை கடாசி விட்டு இந்த உபுண்ட்டுவிற்கு மாறிவிட்டு சும்மா ஜெட் வேகத்தில் பறக்கிறான். நானோ இவ்வளவு காசு போட்டு வாங்கிய விஸ்டாவை அகற்ற வேண்டுமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு உபுண்டுதான் பிடித்திருக்கிறது.
இதில் இன்னொரு முக்கிய விஷயம், இதில் office softwareம் அடங்கியிருக்கிறது. மைக்ரோசாப்டிற்கு நீங்கள் அழுகும் தொகையை யோசித்துப்பாருங்கள். இதில் உள்ள openoffice, சன் கம்பெனி (அட நம்ம சன் டிவி இல்லீங்க) சன் மைக்ரோ சிஸ்டம்சின் உடையது. இதுவும் இலவசம் தான். இதன் தனித்துவம், நீங்கள் மைக்ரோசாப்டின் அனைத்து கோப்புகளையும் இதில் கையாளலாம். இரண்டிற்கும் compatibility (தமிழ்ல இன்னாங்க?) இருக்கிறது.
அதேபோல் நம்ம கிம்ப்பையும் சேத்துருக்காங்க, நீங்க போட்டோஷாப்பிற்கு அலையவேண்டாம் பாருங்க. எல்லாம் லினக்ஸ் வெர்ஷன்.
அதேபோல இலவச கிருமிநாசினி (இதெல்லாம் ரொம்ப ஓவரு, Antivirusனு சொல்ல வந்தததான்...) இருக்கு. இலவச அப்டேட்ஸோட (அனைத்து மென்பொருளுக்கும் உண்டு). இன்னோரு நல்ல விஷயம் இதுல, லின்க்ஸ்ன்றனால இதுக்கு வைரஸ் பாதிப்பு ரொம்ப குறைவு (இல்லவே இல்லன்றான் என் நண்பன்). அப்புறம் ஹார்டுவேர் டிரைவர்ஸ் எல்லாம் கிடைக்குதுன்றான்.
டூயல் பூட்டிங் சப்போர்ட் பண்றதால மொத இத வீட்டு PCல சும்மா ஓரத்துல உபயோகப்படுத்திப்பாருங்க அப்புறம் முழுசா மாத்திக்கோங்க. என்ன தேவையில்லாமல் அப்டேட்ஸ் இல்லாத கிராக்டு மென்பொருள் உபயோகப்படுத்திறதுக்கு இது எவ்வளவோ மேல்.
யாராவது இத உபயோகப்படுத்துறவுங்க இருந்தா எப்படி இருக்குனு சொல்லுங்களேன்.
UPDATE: கருத்துரையில் சிலர் உபுண்டு பற்றி கேட்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவு தெரியாததாகையால் இந்த லிங்கை அடைந்து சிறிய இலவச புத்தகத்தை விரும்பினால் தரவிறக்கம் செய்யலாம். உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
UPDATE: கருத்துரையில் சிலர் உபுண்டு பற்றி கேட்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவு தெரியாததாகையால் இந்த லிங்கை அடைந்து சிறிய இலவச புத்தகத்தை விரும்பினால் தரவிறக்கம் செய்யலாம். உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
![Reblog this post [with Zemanta]](http://img.zemanta.com/reblog_e.png?x-id=cfdb3869-9b76-41ba-a93b-7e8f3f019fb7)
நல்ல பகிர்வு.
நான் உபயோகிக்கும் தம்ப் டிரைவ் இன்டெர்நெட் டிவைசுக்கு இதுவரை டிரைவர்ஸ் கிடைக்கவில்லை.
இன்டெர்நெட் வேலை செய்தாத்தானே மற்றத தேட முடியும்.
வேகம் நிச்சியம் அதிகம் தான்.
வைரஸ் என்ற தொல்லை இதுவரை இல்லை ...
வாங்க ஜமால்,
நான் உபயோகிக்கும் தம்ப் டிரைவ் இன்டெர்நெட் டிவைசுக்கு இதுவரை டிரைவர்ஸ் கிடைக்கவில்லை.//
நீங்க உபுண்டுவா உபயோகிக்கிறீங்க? அப்படியா... அனைத்தும் நெட்டில் கிடைக்கும் என்கிறான் என் நண்பன். நீங்கள் நேரடி வயர்டு கனெக்ஷனில் மாட்டி தேடிபார்க்கவேண்டும் போல...
நண்பரே நான் உபுண்டு தான் உபயோக படுத்திகிறேன் ...... மிகவும் நன்றாக உள்ளது ... அதுவும் நான் மடி கணினியில் இன்ஸ்டால் செய்து உபோயகம் செய்கிறேன் '
....நிஜமாகவே vista சவால் விடுவதாக உள்ளது ..... இன்னும் சொல்ல போனால் vista வை விட மிகவும் அருமையாக உள்ளது ....
நான் உபுண்டு லினக்ஸுக்கு மாறிட்டேன். 2 மாசம் ஆச்சு
Hi Ramkumar and tamil nenjam,
ரொம்ப நன்றி வருகைக்கு.
நிஜமாகவே vista சவால் விடுவதாக உள்ளது//
நானும் பார்த்து அசந்துவிட்டேன். விஸ்டா பிசினசில் ஏரோ தீமில் win + tab அழுத்தினால் ஒரு கிராபிக்ஸ் வரும், திறந்திருக்கும் அனைத்து திரையையும் காண்பிக்கும், அதற்கு இவர்கள் போட்டா ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதில் உள்ளதைப் பார்த்தால் வாய் பிளப்பதாக உள்ளது.
தனியாக நான்கு டெஸ்க்டாப் திறந்து 4 தனித்தனி கணினி போல் உபயோகப்படுத்தலாம் என்பதெல்லாம் அருமை.
I was MS Window user, one month back, I shift to Linux Mint & Open Office they are better than Vista & Ms Office. I got all drivers, multimedia software etc. but all are free of cost.
Initially it may seems difficult to use Linux for XP/Vista users, but if they bear and use for one month they will be the King.
I turned to Linux Mint! Are U!!
All the best!
Linux kku oru 'O' Poodu.
why didnt you give your name.... Its ok..
Initially it may seems difficult to use Linux for XP/Vista users//
even if you use XP and change to Vista it will be lil bit uneasy to cope up... i think its the same case here also.
I was searching for openoffice in google, and came to know even election commision of india has switched from ms office to OPEN OFFICE which is free. I hope thats a good step if they follow in all govt offices to reduce cost.
I think Linux Mint you said is based on UBUNTU.
செம்ம ஃபாஸ்ட். நான் அனுபவத்தில் சொல்கிறேன்.
நன்றி தமிழ்நெஞ்சம்.. நீங்கள் எனக்கு முன்னே இதைப்பற்றி எழுதிவிட்டீர்கள் என்று தாமதமாகப் பார்த்தேன்.
:)
i also heard that ubundu is very fast..ll try soon
நன்றி இயற்கை.
:)
Windows seven beats Ubuntu!
Linux is open-source and hence geeks prefer it to Windows. But Seven is user friendly as well as fast. Though there are complaints, Windows interface is very simple. We need not go behind the internet and download various things to make one thing work well. In that respect, Linux itself is a programmer's tool. For a layman like me, Windows thumbs down anyday!
hi how ru Fr?
Im Atham I have changed my system to Upuntu but i cant get internet connection
what cane i do ?
cane u help me?
my mail id aha_haah@yahoo.com
adam_lebbe@hotmail.com
if u like send me ur phone nomber to i talk with u
@வெங்கிராஜா
நீங்கள் சொல்வது சரிதான். லினக்ஸ் டிரைவர்ஸ் தேடுவதெல்லாம் அதிகப்படியான வேலைதான். ஆனால் க்ராக்டு விண்டோசை உபயோகிப்பவர்களுக்கு இது மேல் என்பது என் எண்ணம்.
@அதம், (சரியா?)
நான் கம்ப்யூட்டரில் பெரிய தில்லாலங்கடி இல்லை. ஆனால் நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கு நிறைய காரணம் இருக்கலாம்.. எதற்கு இங்கு சென்று வாருங்கள்
http://www.ubuntu.com/support/communitysupport
:)
hi
after reading your post, I have installed ubuntu, it works well. but I have problem with Yahoo Messenger and Google talk. 1. I have installed YMesanger but cant do voice chat and video chat. 2. Google talk installed but not works. Please try to help me. Thanks. Renga
genictec@yahoo.com.sg
Pls e-mail me, if you have solution. Thanks in advance.
HI renga,
Please see the comments given for Mr. atham, (above). And please note that all softwares used should be for linux and not for windows.
நிறைய கேட்டாச்சு உபுன்டு பற்றி...!!!மாற்ற பயமாயிருக்கு!!!
காசு கொடுத்து வாங்கிய விண்டோசை இன்னும் மாற்றாமல் (மனமில்லாமல்) நானும் இன்னும்தான் மாறிக்கொண்டிருக்கிறேன்.
:)
டெக்னிக்கல் நாலெட்ஜ் இருந்தால் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் இதையும் தனியாக ஒரு பகுதியில் பிரித்து உபயோகித்து பாருங்கள். உண்மையில் அருமையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உபயோகப்படுத்தப்போகும் மென்பொருள் யாவும் இனி லினக்ஸிற்கு ஏற்றதாக தேவைப்படும். மற்றபடி பயமில்லை.
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.