The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color

17.6.09

கூகுள், சமந்தா, நோக்கியா அப்புறம் நான்.

I Just Can't Stop It album cover
ப்போ கொஞ்ச நாளா போட்டோகிராபியை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டு சில வெப்சைட்டுகளில் அதிக நேரம் செலவழிக்கிறேன். தொடர்ந்து என்னுடைய போட்டோசைட்டயும் அப்டேட் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் ப்ளாக் செய்வது மிகவும் குறைந்து போய்விட்டது, அதனால தப்பிச்சீங்க. இருந்தாலும் இப்போ ரெண்டு சைட்டையும் பார்க்கக்கூடிய கொடுமைக்கு ஆளாகியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
*  *  *

இப்போ பிங்கிற்கு ஆப்பு வைக்க கூகுள் புதிய ஒரு வெப்சைட்ட ஆரம்பிச்சுருக்காங்க. Google Squared. அருமையா இருக்கு. இது என்னன்னா நீங்க ஏதாவது ஒரு பொருள் பற்றி இதுல தேடுனீங்கன்னா முழு தேடல்விடையும் ஒரு அட்டவணையா தொகுத்து தருது. உதாரணமா இந்திய பிரதமர்கள்னு அடித்ததில் இந்த பக்கம் வந்தது முயன்று பாருங்கள். ஆகா இனி எந்த search engine உபயோகிக்கிறதுனு ஒரு search enginela தேடணும் போலருக்கு.  எங்க மூளைக்கு கொஞ்சம் வேலை வைங்கப்பா மழுங்கிபோயிடப்போகுது.


* * *

நோக்கியா புதிதாக ஒரு மொபைல் போனை தயாரிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. அது என்னன்னா பேட்டரி சார்ஜ் செய்யாமல் தாமாகவே சார்ஜ் செய்யும் ஒரு மொபைல். இது எப்படின்றீங்களா? அதாவது காற்றில் இருக்கும் ரேடியோ அலைவரிசைகளையும், மின்காந்த அலைகளையும் (electro magnetic waves) கொண்டு தாமாகவே சார்ஜ் செய்துகொள்ளுமாம். இதில் நோக்கியா ஒரு சிறிய முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் மூன்று அல்லது ஐந்து வருடத்தில் வெளியிடத் திட்டமாம். அதில் இருந்து பின்னர் லேப்டாப் அளவிற்கும் வருவார்களாம். வாங்க வாங்க...

* * * 

zemantaனு ஒரு புது Addon, blogger buzz கூவுச்சு, நாம டைப் பண்ற ப்ளாக் வார்த்தைகள வச்சு, ப்ளாகில் படம் போட அது ரெக்கமண்ட் பண்ணுமாம், உபயோகிச்சு பார்த்தேன் நல்லாருக்கு, ஆனா ஒரே ஒரு படம் தான் அதில் இருந்து உபயோகிக்க முடியுது. அது எனக்கு சரியாப் படலை. முதல் படம் அப்படி பிடிச்சது தான். பை பை சமந்தா.

Reblog this post [with Zemanta]

5 பேர் கருத்து சொல்லிருக்காங்க:

’டொன்’ லீ சொன்னது…

நோக்கியா மாட்டர் புதுசு..:-)

Karthik சொன்னது…

நல்ல பதிவு தல. :)

எனக்கு போட்டோக்ராபி பத்தி அதிகம் தெரியாது. (ஐம் பேசிக்கலி எ ரைட்டர், யு ஸி. ;))

கூகிளை ஓவர்நைட்ல யாராலும் அடிச்சி தள்ள முடியாது (அடிச்சித் தள்ற ரேஞ்சில் யாராவது வந்தால் கூட). :)

ஆ! இதழ்கள் சொன்னது…

don and karthik thanks for your comments...

@ கார்த்திக், (ஐம் பேசிக்கலி எ ரைட்டர், யு ஸி. ;))//

என்ன சொல்றது... சாதாரணமா எழுதுறவுங்கன்னா ஆமாளுன்னு சொல்லி கேலி பண்ணலாம் (அதுக்குதான் நீங்களே எழுதியிருக்கீங்கன்னாலும்) எழுத்து ராட்சசண்ட எல்லாம் நான் கேலி வச்சுகிறதில்ல... ஒத்திகிறவேண்டிதான் ...

கூகிளை ஓவர்நைட்ல யாராலும் அடிச்சி தள்ள முடியாது (அடிச்சித் தள்ற ரேஞ்சில் யாராவது வந்தால் கூட//

ஆமாம் கார்த்திக்..இப்பெல்லாம் மக்களுக்கு மைக்ரோ சாப்ட்மேல ஒரு கோபமும், கூகுள் மேல ஒரு மேக்ரோ சாப்ட் கார்னரும் இருக்கு. நம்ம மனச மாத்துறது ரொம்ப கஷ்டம்... கூகுள் கூகுள்தான்.

கலாட்டா அம்மணி சொன்னது…

technicalலாவே எழுதறிங்க....

nokia புது போன் நல்லா இருக்கே...என்னை மாதிரி போனுக்கு சார்ஜ் போட மறந்து போறவங்களுக்கு ரொம்ப உபயோகப்படும்..

ஆ! இதழ்கள் சொன்னது…

@கலாட்டா அம்மணி சொன்னது… //

வேலையில் ஆணி ரொம்ப அதிகமாயிடுச்சு, வேறு எதையும் சிந்தித்து எழுத முடியவில்லை. எழுதணும்னு உட்கார்ந்தால் வேலை விஷயமாக உள்ள பொருட்கள் பற்றியே எழுதும் படி ஆகிவிட்டது. அடுத்த பதிவில் முற்றிலும் இதனை விலக்கி விடுகிறேன்.

நன்றிகள்.

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

தமிழகச் செய்திகள்

நாணய மதிப்பு

இந்தியச் செய்திகள்

Blog Archive

பிற செய்திகள்

வாசிப்போர்

ஆ! இதழ்கள் © 2008. Template by Dicas Blogger.

TOPO