சிரிக்க சில நிமிடம்.
இன்னைக்கு கொஞ்சம் ஆணி அதிகமாயிடுச்சு. ஓய்வுக்கு கொஞ்சம் யூடுயூப் பக்கம் போயி லாரல் அன் ஹார்டி பாத்துகிட்டு இருந்தேன். சின்ன வயசுல நான் அடிக்கடி பார்க்குற கேசட் லாரல் அன் ஹார்டி, சார்லி சாப்ளின். அவ்வளவா சிரிப்பு வரலியா, சார்லி சாப்ளின தேடி பார்த்தேன்.
கீழ இருக்கும் வீடியோ மாட்டுச்சு. பாக்க ஆரம்பிச்சேங்க.. என்னவோ தெரியல சிரிப்பு பொத்துகிட்டு வந்துருச்சு நானும் அடக்கி அடக்கி பாத்தேன். ம்ஹூம் ஒன்னும் முடியல. கண்ணெல்லாம் தண்ணி. என் பாஸ் வேற அந்த பக்கம் இந்த பக்கம் நடந்து போய்கிட்டிருந்தான். வேற வழியே இல்லாம pause பண்ணீட்டு கொஞ்சம் வெளிய நடந்துட்டு வருவோம்னு கேபின விட்டு வெளிய வந்தேன். சிரிப்ப அடக்கி வச்சதுல முகமெல்லாம் சிவந்து போயிருந்துச்சுனு நினைக்கிறேன், என்னோட சேந்து குப்ப கொட்றவன், சம்திங் ராங்?னு கேட்டுட்டு போனான்.
மறுபடியும் மீதத்தையும் பாக்கணும்னு ஒரே ஆசை, போன் வந்தது.. எடுத்து பேசிகிட்டே ஆன் பண்ணேன், அப்டீனா கொஞ்சம் சிரிப்ப அடக்க முடியும்னு ஒரு நப்பாசை. சரியா 10 செகண்ட்ல ரெஃப்ரி மேல பாய்ற சீன். கேக்கவா வேணும், கெட்டுச்சு போங்க... போன்ல இருக்றவண்ட்ட கத்துனதுக்கு சாரி கேட்டுட்டு, “will call back in 10 minsனு” சொல்லி கட் பண்ணீட்டு ஒரே சிரிப்புதான். தயவு செய்து ஆபிஸ்ல இருக்கும் போது இந்த வீடியோவ பாக்காதீங்க.
Thank you Sir, I laughed my head off today.
உங்கள்ட்டயும் பகிர்ந்துக்க நினைத்தேன். பார்த்து சிரிங்க.

![Reblog this post [with Zemanta]](http://img.zemanta.com/reblog_e.png?x-id=3993421f-1900-41d7-b701-b2c4e8d5f08e)
Thank you Tamilish readers, for making the post popular.
வீடியோ எங்கே?
Video தெரியலையா? உங்கள் கனெக்ஷன் மெதுவாக உள்ளதென்று நினைக்கிறேன். பரவாயில்லை கீழே இருக்கிறது லிங்க்... கண்டிப்பா பாருங்க. சிரிக்காமல் இருக்க முடியாது. :)))
http://www.youtube.com/watch?v=zskO9O3hF78&eurl=http%3A%2F%2Fwww.ananthblogs.co.cc%2F2009%2F06%2Fblog-post_22.html&feature=player_embedded
அய்யோ கடவுளே..சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திடுச்சு ஆனந்த்
@நான் ஆதவன்
same blood...
:)))
ஆபிஸ்ல வச்சு பாக்கலியே?
charlie chaplin வீடியோவை நாங்களும் பார்த்தோம்..சிரித்தோம்..ஹிஹிஹி...
@கலாட்டா அம்மணி
ரிலாக்ஸ் பண்ண நல்ல வழியா தெரிஞ்சுது அதான் பகிர்ந்துகிட்டேன். என் சைட்லேயே நான் இப்ப ஏகப்பட்ட முறை பார்த்திருப்பேன்.
:))
சரியான காமெடிங்க ஆனந்த.. :) ரசித்தேன் :)
ஆமாம் கனகு... பேசாமலே ஐந்து நிமிடத்தில் உலக மக்களை இப்படி சிரிக்க வைக்க சா.சா ஆல் மட்டுமே முடியும்.
:))
விருது கொடுத்திருக்கேன் ஆனந்த்....http://nanaadhavan.blogspot.com/2009/07/blog-post_15.html
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கெடச்சிருக்கே ? வாழ்த்துக்கள்........!!!!!!
wow romba super.....Thank you
@நான் ஆதவன்//
ரொம்ப நன்றி.. பெருமகிழ்ச்சி. இப்பெல்லாம் ரொம்ப ஆணி நீங்க சொன்ன மாதிரி அடிக்கடி கிறுக்க ஆசைதான். வேகமா மீண்டு வருவேன் என்று நம்புறேன்.
ரொம்ப நன்றி ரவி,
@இவின்கோபி நல்லா சிரிச்சீங்களா?
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.