The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color

25.7.09

ட்விட்டர் - ஃபேஸ்புக்? குழப்பமா இருக்கே?

கொஞ்ச நாட்களாகவே Facebook, twitter, மற்றும் my space பற்றிய செய்திகளும் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. என்னுடைய சில நண்பர்களும் இதில் பயனர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதில் இறங்குவதற்கு சிறிது தயக்கங்கள் எனக்கு உண்டு.


இணையத்தில் என்னைப் பற்றிய தகவல்களையும், நான் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதையும் உடனுக்கு உடன் பெயர் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவது என்னால் சிறிதளவும் முடியாத காரியம் என்று எண்ணுகிறேன். அதிலும் சில நண்பர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு பிறரை பார்வையிட அழைப்பதும் என்னால் ஜீரணிக்க முடியாத உண்மை. இவை அனைத்தும் நண்பர்களிடம் மட்டும் என்றால் பரவாயில்லை, பொதுவாக அனைவரும் பார்வையிடுமாறு வைத்தல் என்பது, என்னால் முடியவே முடியாது.


சில நண்பர்கள், ட்வீட் பண்றேன், ஃபேஸ்புக்ல பாரு என்றெல்லாம் சொல்லும் போது, நாம் என்ன பின்தங்குகிறோமோ என்று பயம் ஏற்பட்டது. உடனே நானும் ஒரு கணக்கு தொடங்கினேன். (நான் முதன் முதலில் ஈமெயிலும் தொடங்கியதும் இப்படித்தான்) ஆனால் இது வரையிலும் ஒருமுறை கூட ட்வீட் செய்யவில்லை. இன்னும் தயக்கமாகவே இருக்கிறது.


முன்பெல்லாம் இணையத்தில் புகைப்படத்தையோ அல்லது தொலைபேசி எண்ணையோ தெரிவித்துவிடாதே என்று எங்கள் நண்பர்கள் அனைவரும் ஏதோ இதையெல்லாம் தெரிவித்து விட்டால், நமது (இல்லாத) வங்கிக் கணக்கில் இருந்து (இல்லாத) மில்லியன்களை அடித்து விடுவார்கள் என்று பயமுறுத்திக் கொண்டோம். 

அப்போது பூச்சாண்டி பிடித்தது இன்னும் என் ஆழ்மனதில் ஆட்டிப் படைக்கிறது என்று நினைக்கிறேன். இப்பொழுதோ வெகு சாதாரணமாக ப்ளாகர் கணக்குகளில் புகைப்படங்களும், மோபைல் நம்பர்களும், ஈ மெயில் முகவரிகளும் தொடர்பு கொள்ள அழைக்கின்றன.


இப்பொழுது வரும மோபைல் போன்கள், ஃபேஸ்புக், மற்றும் ட்விட்டர் இரண்டையும் இணைத்துக்கொண்டு பல்லை இளிக்கின்றன. இவை நமது கணினியோடு நிற்கப்போவதில்லை. நம் கையிலேயே எந்த நேரமும் கூடவே இருக்கப்போகிறது. மனிதர்களோடு செலவழிக்கும் நேரம் குறைகிறது. இனி மனிதனின் பெயரைத் தாங்கிவரும் கருவிகளோடு நேரத்தை கழிக்கப்போகிறேனா என்று தெரியவில்லை. 


இனி உலகம் இப்படித்தான் இருக்கப்போகிறதா? இனி நானும் இப்படித்தான் மாறப்போகிறேனா என்றும் தெரியவில்லை. பர்கரையும் பீட்ஸாவையும் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் இப்போதைக்கு பிடித்திருக்கிறது, அதைவிட்டு என் லேப்டாப்பில் அவர்கள் அளிக்கும் பர்கர் ஐகானை பெற்றுக்கொண்டு ஒரு ஸ்மைலி அனுப்புவது என் வயிறை நிறப்ப மறுக்கிறது. உலகத்தை பின் நோக்கி இழுக்க என்னால் மட்டும் முடியுமா என்ன?


இப்போதைக்கு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறேன், திசைதான் என்று மாறுமோ தெரியவில்லை.

17 பேர் கருத்து சொல்லிருக்காங்க:

Suresh Kumar சொன்னது…

அப்பப்ப இருக்கிறது போல மாறிகிட்டே இருக்க வேண்டியது தான் . அதுக்காக பேஸ் புக்ல வர்ற பர்கரை நம்பி சாப்பிடாத இருக்காதீங்க

நாடோடி இலக்கியன் சொன்னது…

நான் நினைத்து கொண்டிருந்ததை நீங்க எழுதிட்டீங்க.

நல்ல இடுகை.

எட்வின் சொன்னது…

என்னன்னு சொல்றதுங்க... காலம் மாறி போச்சே.

cheena (சீனா) சொன்னது…

உண்மை உண்மை - ஆனால் வேறு வழி இல்லை - நாம் காலத்தோடு சேர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை

☀நான் ஆதவன்☀ சொன்னது…

உண்மை தான் :(

Karthik சொன்னது…

ட்விட்டர் நானும் யூஸ் பண்ணுவதில்லை தல. பேஸ்புக் மட்டும்தான். நான் இவற்றைப் பற்றி அதிகம் யோசித்ததில்லை. :-(

நீங்க பேமிலி, ப்ரெண்ட்ஸ் விட்டு தனியா இருக்கீங்கன்னா இவை ரொம்ப யூஸ் புல்லா இருக்குமே? :-)

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

நல்ல பதிவு..இங்கே பாருங்கள்..உதவக் கூடும்..

http://mrishaanshareef.blogspot.com/2009/07/what-is-twitter-and-how-does-it-work.html

ஆ! இதழ்கள் சொன்னது…

@sureshkumar

அது தான பிரச்சனையே சுரேஷ், யாரும் பர்கர் வாங்கித்தரமாட்ராங்களே, ஐகான் அனுப்புறதோட முடிந்திருது.



@நாடோடி இலக்கியன்

ஆமாங்க எல்லாரும் நினைக்கிறோம்ல?


@எட்வின்

நம்மளும் மாறவேண்டியதுதான? ம்ம் இன்னும் என்னென்ன வரப்போகுதோ?

ஆ! இதழ்கள் சொன்னது…

@cheena (சீனா)

உண்மை உண்மை - ஆனால் வேறு வழி இல்லை - நாம் காலத்தோடு சேர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை//

சரிதான் இன்னும் எத்தனை நாள் உபயோகிக்காம இருக்கிறேன் பார்க்கிறேன்.

:)



@Karthik

ட்விட்டர் நானும் யூஸ் பண்ணுவதில்லை தல. பேஸ்புக் மட்டும்தான். நான் இவற்றைப் பற்றி அதிகம் யோசித்ததில்லை. :-(//

தயவு செய்து யோசிக்காதீங்க... நான் யோசிச்சு யோசிச்சு இப்ப பாருங்க பயமா இருக்கு. ஆனாலும் ஜோதில ஐக்கியமயிடுவேன்னு நினைக்கிறேன். இழுத்துவிட்டதுக்கு நன்றி (உண்மையாங்க)



நீங்க பேமிலி, ப்ரெண்ட்ஸ் விட்டு தனியா இருக்கீங்கன்னா இவை ரொம்ப யூஸ் புல்லா இருக்குமே? :-)//

ரொம்ப சரி, என்னுடைய நிறைய நண்பர்கள் இப்படித்தான் ராக்கோழியா இருக்காங்க. தனியா இருக்கும் போது கண்டிப்பா இது பிடிப்புதான். நான் பல தடவை போன்ல காதக் கடிச்சிகிருவேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருமாதிரி ட்வீட் பண்ணமுடியாதே? (இல்ல முடியுமா?)

:)


@ரிஷான்

ரொம்ப உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன். தேவையானப்ப கண்டிப்பா உபயோகப்படுத்திக்கிறேன்.

ஆ! இதழ்கள் சொன்னது…

@ஆதவன்

ஸாரி மிஸ் பண்ணீட்டேன். ரொம்ப நன்றி ஆதவன்.

வெட்டிப்பயல் சொன்னது…

ஆனந்த்,
ட்விட்டர் எனக்கு பல இடங்களில் பயனுள்ளதா இருந்திருக்கு. ஏதாவது அவசரமா கேட்கணும்னா யாரை கேட்கலாம்னு யோசிக்காம ட்விட்டர்ல போட்டா உடனே பதில் வேகமா வரும். அதே சமயம் எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்ளணும்னு இல்லை. Its our wish. Make the best out of it :-)

ஆ! இதழ்கள் சொன்னது…

@வெட்டிப்பயல்,

ஓ இப்படி ஒரு உபயோகம் இருக்கா? சரிதான். காரணமில்லாம மக்கள் போகமாட்டாங்களே.

:)

வால்பையன் சொன்னது…

அப்படினா என்னான்னே தெரியாததால் விடு ஜூட்!

ஆ! இதழ்கள் சொன்னது…

@வால்

அப்படியா? இந்தியாவில் எல்லோரும் பட்டைய கிளப்புறாங்கனு கேள்விப்பட்டேன்.

கூடியவிரைவில் உங்கள் ப்ளாகிலும் டிவிட்டர் விட்ஜெட்டை பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.

Karthik சொன்னது…

thala, you've awarded in my blog! check this out..

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.html

:)

Karthik சொன்னது…

jaari for the grammar mistake in my previous comment. was in a hurry. :P

ஆ! இதழ்கள் சொன்னது…

அவசரத்தில் சாரி ஃபார் தி மிஸ்டேக் இன் மை பிரிவியஸ் கமெண்ட் என்று படித்துவிட்டேன். இப்படி எல்லாம் ஷாக் குடுக்கக்கூடாது அவ்வ்....

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

தமிழகச் செய்திகள்

நாணய மதிப்பு

இந்தியச் செய்திகள்

Blog Archive

பிற செய்திகள்

வாசிப்போர்

ஆ! இதழ்கள் © 2008. Template by Dicas Blogger.

TOPO