நன்றிகள், வாழ்த்துக்கள் - இன்னும் இன்னும் கலக்குங்க
மிகவும் சந்தோஷமான விசயம் நான் இப்போ வாங்கியிருக்கிற விருதுகள். சுவாரஸ்ய பதிவர் விருது வழங்கி என்னை கவுரவப் படுத்தியிருக்கிறாங்க. அதுவும் கொடுத்தவர்கள் யாருன்னு கேட்டீங்கன்னா, என்னுடைய விருப்பமான பதிவர்கள் நான் ஆதவன், பாதசாரி, மற்றும் வானவில் வீதி.
முதன் முதலில் எனக்கு இந்த விருது கொடுத்தது நான் ஆதவன். இவர் கொடுத்து கிட்டத்தட்ட 15 நாள் ஆகிவிட்டது. இவர்ட்ட எனக்கு பிடித்த பதிவுன்னா துபாயில் பேக்கரி கடை ஓனர் "வீரபாகு” , அப்ப இருந்து தான் அவர் பதிவ படிக்க ஆரம்பிச்சேன்னு நினைக்கிறேன். பக்கத்துல தெரியுற அனிமேஷன் இவரோட வேலைதான். காப்பிரைட் அவரோடது தான்... (ஆதவன் அந்த டீல மறந்துறாதீங்க)
அடுத்து கொடுத்தவர் வெங்கிராஜா. இவர் கொடுத்தது என் புகைப்பட ப்ளாக் ஆனந்த் க்ளிக்ஸ் க்கு. அதில் எழுத முடியாததால் இதிலேயே எழுதிவிட்டேன். இவருக்கும் புகைப்படத்தில் விருப்பம் இருக்கும் என்பது உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்கும். இவருடைய செல்போன் புகைப்படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும்.

அடுத்து கொடுத்தவர் கார்த்திக், வானவில்வீதி. ஏற்கனவே இவரைப் பற்றி பலமுறை சொல்லிவிட்டேன். இளமைத் துள்ளலுடன் எழுதும் நண்பர். இப்பெல்லாம் அவர் சிறப்பாக ப்ளாக் எழுத வேண்டியிருப்பதால் சிறிது யோசிக்க வேண்டியது இருக்கிறதென்று கூறுகிறார். என் எண்ணம் இவர் யோசிக்காமல் மனதில் தோன்றியதை எழுதினாலே சிறப்பாகவும் வெரைட்டியாகவும் இருக்கும் என்பது தான்.
கொடுத்தவங்கள பத்தி எழுதியாச்சு. இனி நான் கொடுக்கணுமே. இதோ
மதிபாலா : இவருக்கும் எனக்கும் கிட்டத்தட்ட எல்லா விஷயத்திலும் சண்டைதாங்க. இவர் சொல்றது எனக்கு தப்பா தெரியும், நான் சொல்றது அவருக்கு (எல்லாருக்குமேவா? சும்மா இருங்கப்பா..) தப்பா தெரியும் இருந்தாலும், எனக்கு இவர் ப்ளாக் ரொம்பவே பிடிக்கும். கொஞ்சம் சீரியஸ்னஸ் குறைத்து ஜாலி மூடுக்கு நல்லவேளையா வந்திருக்கிறார்.
கிரி : இவருடைய ப்ளாகில் அனைத்து தரப்பு விஷயங்களும் சும்மா பூந்து விளையாடும். இவருடைய ப்ளாகில் வெகு நாட்களாகவே நான் சைலண்ட் வியுயராக இருக்கேன்.
கடைசியாக கனகு இவர் ஒரு புதிய வலைப்பதிவர். இவருடைய பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து பலதரப்பட்ட விஷயத்தையும் எழுதிக் கலக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
வழங்கிய மூவருக்கும், வாங்கிக்கொண்ட மூவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.


விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். என்னைப் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி ஆனந்த் :)
அட என்னங்க இது? நான் தான் ஏதோ ஒரு ஞாபகத்துல மூணு பேருக்கு மட்டும் கொடுத்தேன்னா நீங்களுமா? :)
அனிமேசனுக்கு காப்பி ரைட்ஸ் எதுவும் இல்ல. யார் வேணாலும் எடுத்துகிட்டும். நமக்கு விளம்பரம் தானே :)
உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி :-)
வாழ்த்துக்கள் கொடுத்தவர்க்கும் பெறுபவர்க்கும்
வாழ்த்துகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தவருக்கும்.
@ஆதவன்,
காப்பிரைட்ஸ் இல்லையா அப்ப உடனே உங்க ப்ளாக் பேர தூக்கீட்டு என் ப்ளாக் பேர போட்டுக்கிறேன்.
:))
ரொம்ப நன்றி ஆதவன் விருதுக்கு..
****************
@கிரி
மிக்க நன்றி கிரி மேலும் மேலும் கலக்குங்க.
****************
@நேசமித்ரன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
****************
வாங்க ஜமால்,
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி...
நன்றி தல! கிரி பிளாக் எனக்கு ரொம்ப நாளா தெரியும். கனகுவை கொஞ்ச நாளாக தெரியும். ரெண்டு ப்ளாக்கும் எனக்கும் பிடிக்கும். :-)
மற்ற மூன்று போரையும் படித்துப் பார்க்கிறேன். :-)
@karthik,
Thank you very much karthik. கொஞ்ச நாட்களா பதிவு குறைவா இருக்கு? படிப்பில் பிசியாக இருந்தால் பரவாயில்லை.
:))
Nandri Nanbar Ananth...
Sandaiyil than natbu thulirkkirathu...
Valthukkal ungalukkum matra viruthu petravarkallukkum.
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
ரொம்ப நன்றி அண்ணா.. :) தங்களுக்கும் வாழ்த்துக்கள் :)
வித்தியாசமாகவும் நல்ல விஷயமாகவும் எழுத முற்சி செய்கிறேன் :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
@மதிபாலா
ரொம்ப நன்றி ஐயா... வருகைக்கும் பெற்றுகொண்டமைக்கும், கருத்துக்கும்.
@டான்.
டான்... எப்படி போகுது ஒஸ்லோ... வேகமா எழுதுங்க...
@கனகு
ரொம்ப நன்றி கனகு பெற்றுக்கொண்டமைக்கு.
@நாகா
வாழ்த்துக்களுக்கு நன்றி.
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.