The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color
The script change the background color fo this layer!
Change Background color

9.3.10

மத்திய அரசு மக்களை ஏமாற்றி துரோகம் செய்கிறதா? தெரிந்து கொள்ளுங்கள்

தினமணியில் இன்றைய தலையங்கத்தில் இந்த கட்டுரை வெளிவந்திருக்கிறது. இது எவ்வளவு தூரம் உண்மை. இது எத்தனை பேருக்கு தெரியும் என்றும் தெரியவில்லை. இதனை தட்டிக்கேட்க ஏன் ஒரு திடமான எதிர்க்கட்சியில்லை என்று தெரியவில்லை. தினமணியில் வந்திருக்கும் கட்டுரை இதோ.

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.
உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?
நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி தினமணி

8 பேர் கருத்து சொல்லிருக்காங்க:

Karthik சொன்னது…

தல கவர்ன்மென்ட் கார்பரேஷன்களுக்கு சாதகமான ஆட்சிதான் நடத்துறாங்க. போபால் விஷவாயு கசிவுக்காக அந்த கம்பெனிய சரியான முறையில் தண்டிச்சிருக்கோமா? வேதாந்தா மாதிரியான கம்பெனிஸ் அலுமினியம், பாக்ஸைட் களை கொள்ளையடிக்க விட்டிருக்கோம்தானே? அணுசக்தி கம்பெனிஸ்கும் இதெல்லாம் கெடைக்கும். கேட்டா டெவலப்மென்ட்னுவாங்க. என்ன ஜனநாயகமோ?

பெயரில்லா சொன்னது…

அய்யா மதிப்பிற்குரிய தினமணி வைத்தியநாத அய்யர் அவர்கள், இன்றைய (09 .03 .2010 ) தினமணியில் தலையங்கம் செய்தி ஆரம்பிக்கும் போதே

"அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை."

அதாவது மகளிர் நலன் கருதி இட ஒதிக்கீடு வரவில்லை என்று ஆரம்பிக்கீறார். முடிக்கும் பொது எப்படி சொல்லுகிறது தினமணி பூணூல் "நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்." நாம் என்றல் யாரு என்று தெரியவில்லை இந்த இடத்தில. ஒரு வேலை பி.ஜே.பி ஆதரவை மறைமுகமாக சொல்லுகிறார்களோ என்னவோ.

தினமணி உண்மையிலேயே பேராபத்து ஏற்படும் அணு உலை பற்றி என்ற நோக்கத்தில் தான் என்றல் நாம் அதனை எந்த வெறுப்பு இன்றி ஏற்றுக்கொள்ளலாம். அனால் அவர் கூறும் பேர​பா​யம் உண்மையிலேயே அணு உலை பற்றி இல்லை என்பது நமக்கு மிக தெளிவாக தெரிகிறது. அவா கூறும் பேர​பா​யம் முதலில் இட ஒதிக்கீடு அப்புறம் உள் ஒதிக்கீடு என்ற திராவிட கட்சிகளின் நிலை பற்றி. இப்படி வர இட ஒதிகீடுல கூட பார்பனர்களுக்கு முழுமையாக அனுபவிக்க கொடுக்க மட்டேன்குரங்கலேன்னு ஒரே கவலை தினமணிக்கு. இந்த பேர​பா​யம் சொல்லத்தான் அணு உலை என்கிற உவமையை கையில் எடுத்துகொண்டு தினமணி விளையாடி இருக்கிறது. அது ஒன்று தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அணு உலை மட்டும் பற்றிய பேர​பா​யம் மாக தோன்றலாம். ஈரோட்டு கண்ணாடி போட்டு அய்யா அவர்களின் வழியில் உற்று நோக்கினால் நன்றாக விளங்கும் என்ன சொல்ல வருகிறது தினமணி என்று.

இட ஒதுக்கீடு என்றாலே பார்பனர்களும் பார்பன பத்திரிக்கைகளும் அய்யா காலத்திலிருந்து இன்று வரை எப்பொழுதும் எதிர்ப்புதான் முன்னெரெல்லாம் நேரடியாக சொல்லி எதிர்பார்கள் இன்று 1000 அடி பள்ளத்தில் பார்பனியத்தை குழி தோண்டி புதைததனால் கொஞ்சம் இல்லை மறை காயாக எதிர்ப்பு கண்பிகிறர்கள். அது இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது எவளவு பெரிய அவலம். தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்

ஆ! இதழ்கள் சொன்னது…

@karthik,

பெரிய பெரிய பிரச்சனைகளில் மிகவும் எளிதாக கோட்டை விடுகிறார்கள் கார்த்திக். பேச்சுவார்த்தையில்லை என்று கூறி அழுத்தம் வந்தவுடன் தாமாக ஓடிப்போய் பேசுகிறார்கள். என் கவலை, தாமாக இவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் ஆதரிப்பேன் ஆனால் ஒவ்வொன்றிற்கும் பிற நாடுகள் கூறுவதைக் கேட்டு ஆடுகிறார்களே, அது தான்.

@பெயரில்லா,

அய்யா, நீங்கள் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும் அதற்காக வெளிநாட்டு கம்பெனிகள் வந்து ஏற்படுத்தும் விபத்திற்கு நம் அரசாங்கம் ஈடு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இதே போல் அவர்கள் நாட்டில் ஏற்பட்டால் அந்த அரசாங்கம் நம் கம்பெனிகளுக்கு கூன் போட்டு பணிவிடை செய்யுமா?

Veliyoorkaran சொன்னது…

சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

அப்பாவி தங்கமணி சொன்னது…

காசுக்கு ஒட்டுங்கற விசயம் இருக்கற வரைக்கும் நாம யாரையும் கேள்வி கேக்க முடியாது பிரதர்...அந்த உரிமை ஜனநாயகத்தோட போய்டுச்சு...இப்ப இருக்கறது பணநாயகம்...நீங்க எழுதின விதம் ஒரு professional reporter மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்

ஆ! இதழ்கள் சொன்னது…

@veliyoorkaran,

நன்றீஸ்... தகவலுக்கு. :)

@அப்பாவி தங்கமணி,

ooops..இது ஒரு புரொபஷனல் ரிப்போர்ட்டர் எழுதியதுதாங்க. நாலு மக்களுக்கு தெரியணும்னு மேற்கோள் காட்டினேன்.அவ்வளவுதான் இதில் என் வேலை. ஆனால் நீங்க சொல்றது முற்றிலும் உண்மை, ஓட்டை நாம் விற்றுவிட்டால் அப்புறம் அதில் நமக்கென்ன உரிமை இருக்கிறது. வருகைக்கு நன்றீஸ். :)

polurdhayanithi சொன்னது…

nalla akkam thinamani ippadi oru sila nalla seythi kalaiyum vwliyidu kirathu ariyamaiyel
ulla makkathan? parppom
polurdhayanithi

Softy சொன்னது…

மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


http://www.verysadhu.blogspot.com/

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

தமிழகச் செய்திகள்

நாணய மதிப்பு

இந்தியச் செய்திகள்

Blog Archive

பிற செய்திகள்

வாசிப்போர்

ஆ! இதழ்கள் © 2008. Template by Dicas Blogger.

TOPO